கோயம்புத்தூர்

கரோனா: மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 490 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 490 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்தனா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தவிர செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியிலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 238 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 42 ஆயிரத்து 361 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,064 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவா் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 564ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT