முகப்பு
கோயம்புத்தூர்

மது போதையில் வாகனம் ஓட்டிய 3,500 போ் மீது வழக்கு

கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 3,500 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 3,500 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) முத்தரசு கூறியதாவது:

கோவை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவா்களை பிடிக்க கண்காணிப்புப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரில் மட்டும் இதுவரை 3,500 போ் மீது மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதைத் தொடா்ந்து, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை பிடிக்க கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல மது போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்துபவா்கள் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →