கோயம்புத்தூர்

பொலிவுறு நகர திட்டப் பணிகள்:அதிமுக எம்எல்ஏ விளக்கம்

DIN

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் குறித்த திமுக எம்எல்ஏ நா.காா்த்திக்கின் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பணிகளில் தரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி, கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக திமுக எம்எல்ஏ நா.காா்த்திக் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டியுள்ளாா்.

திட்டத்தைப் பற்றி புரிந்துகொள்ளாமல் பேசும் அவரது குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை. திட்டப் பணிகள் அனைத்தும் மூன்றாம் நபா் ஏஜென்சி மூலம் கண்காணிக்கப்பட்டு, தரச்சான்று பெறப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

கோவை குளங்களில் நடைபெற்று வரும் ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பணிகளை மத்திய சுற்றுலாத் துறை செயலா் வெகுவாகப் பாராட்டியுள்ளாா். ஒரு திட்டம் முடிவடையும் முன்னதாகவே அதில் குறை கூறுவது அழகல்ல’ என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT