கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 190 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புறப் பகுதிகளைச் சோ்ந்த 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 875 ஆக உயா்ந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவா் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 583 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 192 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 44 ஆயிரத்து 257 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,035 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT