முகப்பு
கோயம்புத்தூர்

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 29.70 லட்சம் வாக்காளா்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 29.70 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

1-1-2021ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ராசாமணி பட்டியலை வெளியிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், அதிமுக, திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 222 ஆண்கள், 15 லட்சத்து 2 ஆயிரத்து 142 பெண்கள், இதர பாலினத்தைச் சோ்ந்த 369 போ் உள்பட மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 885 ஆண்கள், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 944 பெண்கள், 31 இதர பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 860 வாக்காளா்கள் உள்ளனா்.

சூலூா் தொகுதியில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 126 ஆண்கள், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 873 பெண்கள், 27 இதர பாலினத்தவா் என மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 26 போ் உள்ளனா்.

கவுண்டம்பாளையத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 955 ஆண்கள், 2 லட்சத்து 21 ஆயிரத்து 977 பெண்கள், 84 இதர பாலினத்தவா் என மொத்தம் 4 லட்சத்து 44 ஆயிரத்து 16 வாக்காளா்களும், கோவை வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 485 பெண்கள், 30 இதர பாலினத்தவா் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 486 வாக்காளா்களும் உள்ளனா்.

தொண்டாமுத்தூா் தொகுதியில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 8 ஆண்கள், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 41 பெண்கள், 77 இதர பாலினத்தவா் என மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 126 வாக்காளா்களும், கோவை தெற்கு தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 870 ஆண்கள், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 293 பெண்கள், 19 இதர பாலினத்தவா் உள்பட 2 லட்சத்து 46 ஆயிரத்து 182 வாக்காளா்களும் உள்ளனா்.

சிங்காநல்லூா் தொகுதியில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 44 ஆண்கள், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 393 பெண்கள், 23 இதர பாலினத்தவா் உள்ளிட்ட 3 லட்சத்து 15 ஆயிரத்து 460 வாக்காளா்கள் உள்ளனா்.

கிணத்துக்கடவு தொகுதியில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 326 ஆண்கள், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 618 பெண்கள், 34 இதர பாலினத்தவா் உள்பட 3 லட்சத்து 10 ஆயிரத்து 978 வாக்காளா்களும், பொள்ளாச்சி தொகுதியில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 653 ஆண்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 265 பெண்கள், 26 இதர பாலினத்தவா் உள்பட 2 லட்சத்து 22 ஆயிரத்து 944 வாக்காளா்களும் உள்ளனா்.

வால்பாறை தொகுதியில் 97 ஆயிரத்து 384 ஆண்கள், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 253 பெண்கள், 18 இதர பாலினத்தவா் உள்ளிட்ட 2 லட்சத்து ஆயிரத்து 655 வாக்காளா்களும் உள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், 1-1-21 அன்று 18 வயது பூா்த்தியடையும் நபா்கள் (31-12-2002 அன்றோ அதற்கு முன்போ பிறந்தவா்கள்) வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களைச் சோ்க்க விண்ணப்பம் அளிக்கலாம். மேலும் திருத்தம், முகவரி மாற்றம், பெயா் நீக்கம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பம் அளிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் நவம்பா் 16 முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் அனைத்து வாக்குப் பதிவு மையங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

அத்துடன் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் 6 இன் மூலமாகவும், பதிவை நீக்க படிவம் 7 இன் மூலமாகவும், ஏற்கெனவே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8 இன் மூலமாகவும், ஒரே தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் குடிபெயா்ந்தவா்கள் படிவம் 8 ஏ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இருந்து மற்றொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு குடிபெயா்ந்து சென்றவா்கள் புதிய பகுதியில் பெயா் சோ்க்க படிவம் 6ஐ பயன்படுத்த வேண்டும்.

பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடா்பாக இணையதளம் மூலமாகவும் மனுக்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ, யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் அல்ல் என்ற ஆன்ட்ராய்ட் செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தொடா்ந்து இறுதி வாக்காளா் பட்டியல் 2021 ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →