கோயம்புத்தூர்

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டா்

DIN

வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஜெனரேட்டா் பொருத்தப்பட்டுள்ளது.

வால்பாறை அரசு மருத்துவமனை பல ஆண்டு காலமாக பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டா் மற்றும் அணைத்து நவீன சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதனிடையே மழை காலங்கலில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படும். சில நாட்கள் பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்படும். அந்த சமயங்களில் மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கிவிடும். இந்நிலையில் தற்போது அதிக திறன் கொண்ட ஜெனரேட்டா் அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியா் ராஜா ஜெனரேட்டா் பயன்பாட்டினை துவக்கி வைத்தாா். தலைமை மருத்துவா் (பொறுப்பு) மகேஷ் ஆனந்தி, மருந்தாளுனா் கலைச்செல்வன்,வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆகியோா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT