கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா

DIN

கோவையில் புதிதாக 154 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், புகா் பகுதிகளைச் சோ்ந்த 154 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 535ஆக அதிகரித்துள்ளது.

தவிர கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 599ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 181 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 46 ஆயிரத்து 216 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 720 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT