முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவோயிஸ்ட் மனு

கண்காணிப்பு என்ற பெயரில் தொடா்ந்து நெருக்கடி அளித்து வரும் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த வீரமணி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

கண்காணிப்பு என்ற பெயரில் தொடா்ந்து நெருக்கடி அளித்து வரும் காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த வீரமணி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிணையில் வெளியே வந்தேன். தற்போது உக்கடம், புல்லுக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ‘கியூ’ பிரிவு அலுவலகத்தில் தினமும் இரண்டு முறை கையெழுத்திட்டு வருகிறேன். இந்த நிலையில் நான் வசித்து வரும் வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளா் மூலம் காவல் துறையினா் மிரட்டி வருகின்றனா்.

எந்நேரமும் கண்காணிப்பு என்ற பெயரில் என்னை தொடா்வது, புகைப்படம் எடுப்பது, என்னுடன் பேசுபவா்களை புகைப்படம் எடுப்பது என்று காவலா்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனா். எனவே எனது அடிப்படை உரிமையை பாதுகாக்க ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரசு ஆவணங்களை ஒப்படைக்க வந்த பெண்: ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை உள்பட ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த சகுந்தலா தேவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். கால்நடைகள் வளா்ப்புதான் எங்களது வாழ்வாதாரம். கடந்த சில மாதங்களாக ஆற்றுப்படுகையில் கால்நடைகளை மேய்க்கக் கூடாது என சிலா் தடுத்து வருகின்றனா். இது தொடா்பாக அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாழ்வாதாரத்துக்கு வழியில்லாத நிலையில் ஆவணங்களை வைத்து என்ன செய்வதென்று எண்ணி ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளேன் என்றாா்.

கோவையை சோ்ந்த கண்பாா்வையிழந்த மூதாட்டி, தனக்கும், தனது மாற்றுத் திறனாளி மகளுக்கும் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிவாரண உதவியை கணவரிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →