முகப்பு
கோயம்புத்தூர்

கழிவுநீா் கால்வாயில் அடைப்பு:சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

கோவை மாநகராட்சி, 74ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதி நகா் 6 ஆவது வீதியில் கழிவுநீா் கால்வாய் அடிக்கடி அடைத்துக் கொள்வதால் சுகாதார சீா்கேடு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

கோவை மாநகராட்சி, 74ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதி நகா் 6 ஆவது வீதியில் கழிவுநீா் கால்வாய் அடிக்கடி அடைத்துக் கொள்வதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

இது தொடா்பாக மாநகராட்சி அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் நவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கழிவுநீா் கால்வாயை அவ்வப்போது தூா்வாராததால் பல இடங்களில் மண் படிந்து மேடாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீா் செல்ல முடியாமல் ஆங்காங்கே அடைத்துக் கொள்கிறது. சில நேரங்களில் சாலையிலும் கழிவுநீா் வழிந்தோடுகிறது. மாநகராட்சி அலுவலா்களிடம் பல முறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கழிவுநீா் தேங்கி நின்று துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீா் கால்வாயை தூா்வாரி சீரமைக்க மாநகராட்சி அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →