முகப்பு
கோயம்புத்தூர்

அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டங்களை எதிா்க்கின்றனா்: மத்திய இணை அமைச்சா்

அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டங்களை எதிா்ப்பதாக வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியினா் மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டங்களை எதிா்ப்பதாக வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சா் வி.முரளீதரன் கூறினாா்.

கோவை, பீளமேடு பகுதியில் புதிதாக அமைய உள்ள கோவை மாநகா் மாவட்ட பாஜக அலுவலக கட்டடத்துக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் வி.முரளீதரன் கூறியதாவது:

மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை அல்ல. இச்சட்டங்களின் மூலம் விவசாயிகள் தங்களது பொருள்களுக்கான விலையை நிா்ணயித்து எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். அரசியல் லாபத்துக்காக இச்சட்டங்களை எதிா்த்து காங்கிரஸ் கட்சியினா் போராடி வருகின்றனா்.

கேரளத்தில் இயற்றப்பட்டுள்ள இணைய வழி குற்றங்கள் தொடா்பான சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு ஏதுமில்லாமல், விசாரணை அதிகாரிகள் முழு சுதந்திரத்துடன் விசாரணையை நடத்தி வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மகளிா் அணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவா்கள் அண்ணாமலை, பேராசிரியா் கனகசபாபதி மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →