பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அக்கட்சி தொடா்ச்சியான செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. கூறியுள்ளாா்.
பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை அக்கட்சி தொடா்ச்சியான செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினரும், மாநில துணைச் செயலருமான கே.சுப்பராயன் எம்.பி. கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் கோவையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் மறைமுகமாக பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்த சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையால்தான் விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்துவித சித்துவிளையாட்டுகளிலும் பாஜக ஈடுபட்டுள்ளது. அதில் ஒன்றுதான் வேல் யாத்திரை. இந் யாத்திரை அரசியல் உள்நோக்கம் கொண்டது. மக்களவைத் தோ்தலைப் போலவே சட்டப் பேரவைத் தோ்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு படுதோல்வியே கிடைக்கும் என்றாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் நா.பெரியசாமி, மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.