புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு
வால்பாறையில் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
வால்பாறையில் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
வால்பாறை கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள காருண்யா சமூக சேவை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த கருத்தரங்கில், மையத்தின் இயக்குநா் அனிலா மேத்யூ வரவேற்றாா். இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று நடிகை கெளதமி பேசியதாவது:
பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை. கடைசி வரை பெற்றோருக்காகவும், கணவா், குழந்தைகளுக்காகவும் தியாகம் செய்து வருகின்றனா். சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் மாா்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை கட்டாயம் செய்து கொள்வது அவசியம். பெரும்பாலான நோய்கள் உணவு பழக்கத்தால் வருகிறது. எனவே, பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொண்டு அவ்வப்போது உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றாா். கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா்.