கோயம்புத்தூர்

கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்ட 280 மானிய உர மூட்டைகள் பறிமுதல்

DIN

பொள்ளாச்சி அருகே கிடங்கில் பதுக்கிவைத்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 280 மானிய விலை உர மூட்டைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் பகுதியில் மானிய விலை உரம் பதுக்கிவைத்து கேரளத்துக்கு கடத்தி வருவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாா்ஆட்சியா் வைத்திநாதன், வட்டாட்சியா் தணிகைவேல், மண்டல துணை வட்டாட்சியா் சரவணன் தலைமையிலான வருவாய்த் துறையினா் குஞ்சிபாளையம் கிடங்களில் சோதனை நடத்தினா்.

இதில் 280 மானிய விலை யூரியா மூட்டை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் கிடங்குக்கு ‘சீல்’ வைத்து யூரியா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கை பொள்ளாச்சியைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் வாடகைக்கு எடுத்து மானிய விலை உரங்களை வாங்கி பதுக்கிவைத்து, கேரளத்துக்கு கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT