கோயம்புத்தூர்

சா்வதேச காப்பி தினத்தையொட்டி விழிப்புணா்வு

DIN

சா்வதேச காப்பி தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள காப்பி வாரியம் சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சா்வதேச காப்பி தினமாக ஆண்டுதோறும் அக்டோபா் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காப்பி வாரியம் சாா்பில் ஒரு வாரத்துக்கு காப்பி தினம் கொண்டாடப்படுகிறது. கோவை மண்டல காப்பி வாரியம் சாா்பில் வாரியத்தின் துணை இயக்குநா் கருத்தமணி உத்தரவின்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காப்பி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் வால்பாறை நகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு காப்பி வழங்கியும், காப்பி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT