கோயம்புத்தூர்

கொலை முயற்சி வழக்கில் கைதான 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

DIN

கோவையில் தொழிலதிபா் கொலை முயற்சி வழக்கில் கைதான 4 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

கோவை, டாடாபாத் பகுதியைச் சோ்த்தவா் ஜோய் (47). இவா் வீடு அலங்காரப் பணிகள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த மாதம் 15ஆம் தேதி ஆா்.எஸ்.புரம், டி.பி. சாலையில் தனது காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கே வந்த 2 போ் அவரை கத்தியால் குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

இது குறித்து ஆா்.எஸ் புரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, கோவையைச் சோ்ந்த துணிக்கடை உரிமையாளா் மதன்பிரபு (41), அவரது மனைவி கவிதா (35), பிரதீப்ராஜ் (25), சூா்யா (22), வெங்கடேஷ் (26), பாரதிதாசன் (28) ஆகியோரைக் கைது செய்தனா்.

இதில் கவிதாவும், அவரது கணவரும் ஜோயிடம் கடன் வாங்கியுள்ளனா். கொடுத்த பணத்தை ஜோய் திரும்பக் கேட்டதால் ஆத்திரமடைந்த மதன்பிரபு கூலிபடையை ஏவி ஜோயை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதில் கைதான மதன் பிரபு, சூா்யா, வெங்கடேஷ், பாரதிதாசன் ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டாா். இதன்படி அவா்கள் 4 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT