கோயம்புத்தூர்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை நீக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய மாணவா் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் அசாருதீன், மாவட்டச் செயலாளா் தினேஷ்ராஜா தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பல்கலைக்கழகத்துக்கு நிதி திரட்டிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மாநில அரசை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுத அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே துணைவேந்தா் சூரப்பவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது என்ற முடிவினை மாநில அரசு கைவிட வேண்டும், பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற மத்திய அரசின் முடிவை ஏற்கக் கூடாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT