கோயம்புத்தூர்

சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

DIN

கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் பெற்றோா்களால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையைa போலீஸாா் மீட்டனா்.

கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உணவகத்தில் இருந்த உணவுக் கழிவுகளை ஊழியா் ஒருவா் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கொட்டச் சென்றாா். அப்போது, குப்பைக்கு இடையே சிறிய துணி போா்த்திய நிலையில் பிறந்து ஒரு சில நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது.

இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா் சிங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், குழந்தையின் தாய், தந்தை யாா் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பேருந்து நிலையத்துக்கு வந்தவா்களில் யாராவது இந்த குழந்தையை போட்டுச் சென்றிருக்கலாம், பேருந்து நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT