முகப்பு
கோயம்புத்தூர்

முன்விரோதம்: கோவையில் இந்து முன்னணி ஆதரவாளர் வெட்டிக்கொலை 

கோவையில் முன்விரோதம் காரணமாக இந்து முன்னணி ஆதரவாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பிஜு.
பகிர்:

கோவையில் முன்விரோதம் காரணமாக இந்து முன்னணி ஆதரவாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு (36). இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் காந்திபுரம் செந்தில் குமரன் தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கினார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிஜுவை பொது மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பிஜு பலியானார். பிஜுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள கோவை காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவை காவல்துறையினர் இந்த தேடுதலை நடத்தி வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஜு, கோவையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை சனிக்கிழமை கத்தியால் குத்தியுள்ளார். இதற்குப் பழிவாங்கும் சம்பவமாக ஆறுமுகத்தின் தரப்பிலிருந்து கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →