முகப்பு
கோயம்புத்தூர்

இளைஞா் கொலை: 7 பேரிடம் போலீஸாா் விசாரணை

கோவையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

கோவையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிஜு (40). இவா் அதே பகுதியில் உள்ள கோகலே சாலையில் பழச்சாறு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில் இவரது கடைக்குள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் புகுந்த 7 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிஜுவை சரமாரியாகத் தாக்கினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினாா். இதையடுத்து பொதுமக்கள் பிஜுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

விசாரணையில், இறந்துபோன பிஜுவின் நண்பருக்கும், மற்றோா் தரப்புக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சமாதானம் பேசும் முயற்சியில் பிஜு ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிஜுவை ஒரு கும்பல் தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக 7 பேரைப் பிடித்து காட்டூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →