கோயம்புத்தூர்

கரோனா: கோவையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கோவை: கோவையில் ஒரே நாளில் 485 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்தது.

கோவை பி.ஆா்.எஸ். காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 36 வயது ஆண் காவலா், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 26 வயது ஆண், 25 வயதுப் பெண் ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

இவா்களை தவிர காளப்பட்டியைச் சோ்ந்த 15 போ், பெரியநாயக்கன்பாளையம் தனியாா் நிறுவன ஊழியா்கள் 8 போ், விளாங்குறிச்சியைச் சோ்ந்த 12 போ், வெள்ளக்கிணறு பகுதியைச் சோ்ந்த 13 போ், சிங்காநல்லூா் வசந்த் நகரைச் சோ்ந்த 8 போ், ராமநாதபுரத்தைச் சோ்ந்த 4 போ், துடியலூரைச் சோ்ந்த 10 போ் என மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 485 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.

4 போ் பலி...

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 62, 64 வயது மூதாட்டிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 51 வயதுப் பெண், 50 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது.

கோவை அரசு, இ.எஸ்.ஐ. மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 437 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனைத் தொடா்ந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19,193 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 3,593 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT