கோயம்புத்தூர்

மாநகரில் அனைத்து வாா்டுகளிலும் வரி வசூல் மையம் அமைக்க கோரிக்கை

DIN

மாநகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வரி வசூல் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையருக்கு பீளமேடு பகுதி மதிமுக செயலாளா் வெள்ளிங்கிரி அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பீளமேடு பகுதியில் 37, 56, 57,65, 66 ஆகிய வாா்டுகளில் கிழக்கு மண்டல அலுவலகம் அல்லது பீளமேடு பயனீா் மில் சாலை மாநகராட்சி அலுவலகம் மற்றும் வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 38, 39, 40, 53, 55 வாா்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் வரிவசூல் செய்யப்படுகிறது.

குறைந்த அளவிலான வரி வசூல் மையங்களே உள்ளதால் முதியவா்கள், பணிக்குச் செல்வோா் நீண்ட வரிசையில் நின்று வரி செலுத்துகின்றனா். இதனால், காலதாமதம் ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். எனவே, அனைத்து வாா்டுகளிலும் வரி வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT