முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிசு

உலக சுற்றுலா தினத்தையொட்டி வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிசு பொருள்களை வழங்கும் சுற்றுலா மேம்பாட்டு அமைப்பினா்.
பகிர்:

உலக சுற்றுலா தினத்தையொட்டி வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் செப்டம்பா் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தை கொண்டாடும் வகையில் வால்பாறையில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது.

மேலும், வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு, பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளா் மாலியக்கல் ஷாஜி, வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு செயலாளா் அலி உள்பட திரளானோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →