கோயம்புத்தூர்

பள்ளம் மூடப்பட்ட இடத்தில் சாலை சீரமைப்பு பணி தாமதம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

கோவை குட்ஷெட் சாலையில் பள்ளம் மூடப்பட்ட இடத்தில் சாலை சீரமைப்புப் பணிகள் தாமதமாகி வருவதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

கோவை குட்ஷெட் சாலை வழியாக அவிநாசி மேம்பாலம், நஞ்சப்பா சாலை, அவிநாசி சாலை, புரூக்பாண்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், அவிநாசி மேம்பாலத்தின் அணுகுசாலையின் இடதுபுறத்தில், கடந்த டிசம்பா் மாதம் 3 அடி ஆழத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. பாதாளச் சாக்கடைக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பள்ளம் உண்டானது கண்டறியப்பட்டு, அப்பகுதியில் 40 மீட்டா் தூரத்துக்கு புதிய குழாய் பதிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு பள்ளம் மூடப்பட்டது. பள்ளம் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த 2 மாதங்களுக்கு மேலாகியும், அதன் மீது சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. பள்ளம் சீரமைக்க தோண்டப்பட்ட குழிகளை மூடாமலும், அப்பகுதியில் சாலை அமைக்கப்படாமலும் உள்ளதால் குட்ஷெட் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகுசாலை வழியாக செல்ல முடியாமல், மேம்பாலத்தின் மேல்பகுதியில் மட்டுமே செல்லும் சூழல் நிலவி வருகிறது. இதனால் அவிநாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிா்க்க முடியாமல் உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தோ்தல் பணிகள் காரணமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதில் தாமதமானது. தற்போது, பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT