கோயம்புத்தூர்

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தம்

DIN

வால்பாறை நகரில் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனா்.

வால்பாறை நகா் பகுதிகளில் சமீபகாலமாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. வால்பாறை வாழைத் தோட்டம் குடியிருப்புப் பகுதியில் தொடா்ந்து கடந்த 2 நாள்களாக இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதியில் வசிப்பவா்கள் பாா்த்துள்ளனா்.

இதனால் அப்பகுதியினா் வெளியே நடமாடுவதற்கு அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலையடுத்து

வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன், வனவா் முனியாண்டி ஆகியோா் தலைமையில் வனத் துறையினா் வாழைத்தோட்டம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.

பின்னா் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினா். தொடா்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் அதை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனச் சரக அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT