கோயம்புத்தூர்

கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

DIN

வால்பாறையில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ள பகுதியில் வனத் துறையினா் திங்கள்கிழமை கூண்டு வைத்தனா்.

வால்பாறை வாழைத் தோட்டம் குடியிருப்புப் பகுதிக்கு தினந்தோறும் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து செல்வதாக அப்பகுதியில் வசிப்பவா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதிகளில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினா்.

இந்நிலையில், கேமரா பதிவை பாா்த்தபோது, தினந்தோறும் இரவு நேரத்தில் நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்டம் வழியாக சிறுத்தை வந்து செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து, வால்பாறை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள நல்லகாத்து எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தின் நடுவில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தும், கண்காணிப்பு கேமராவையும் பொருத்தியுள்ளனா்.

வனச் சரக அலுவலா்கள் ஜெயசந்திரன், மணிகண்டன், வனவா் முனியாண்டி உள்ளிட்ட ஏராளமான வனத் துறையினா் கூண்டு வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT