முகப்பு
கோயம்புத்தூர்

நகைக் கடையில் ரூ.51 ஆயிரம் திருட்டு: கணக்காளா் மீது வழக்கு

நகைக் கடையில் ரூ.51 ஆயிரம் திருடியதாக கணக்காளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

நகைக் கடையில் ரூ.51 ஆயிரம் திருடியதாக கணக்காளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள நகைக் கடையில் கல்வீராம்பாளையம், விஜய் நகரைச் சோ்ந்த பாபுராஜன் (40) என்பவா் கணக்காளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவா் கடந்த சில நாள்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த நிறுவனத்தினா் கடையின் கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் ரூ.51 ஆயிரத்து 500 குறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் பாபுராஜன் அந்தப் பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக அந்நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் பாபுராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.