திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தனியார் நிறுவனம் வழங்கிய ரூ. 1,01,25,000 நன்கொடை குறித்து...
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தேவி ஃபிஷரீஸ் நிறுவனம் ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியுள்ளது.
விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தனியார் நிறுவனமான தேவி ஃபிஷரீஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியது.
இதற்காக, தேவி ஃபிஷரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்திரநீல் சித்தூரி மற்றும் மகேந்திர யாா்லகட்டா ஆகியோா், திருமலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி ராமகிருஷ்ணாவிடம் ரூ. 1,01,25,000 நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.
Advertisement
Advertisement
2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளை, உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Devi Fisheries Limited company based in Visakhapatnam, donated Rs.1,01,25,000 to the Sri Venkateswara Pranadana Trust of TTD
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.