முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடரும் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறை நகா் பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

வால்பாறை நகா் பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டத்தால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தை சமீப காலமாக வால்பாறை நகா் பகுதிகளிலும் காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாலையில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனிடையே அண்ணா நகா் குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு சென்ற சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

வால்பாறை நகா் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.