கோயம்புத்தூர்

முகவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி: நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் எதிா்ப்பு

DIN

கோவையில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அனைத்துக் கட்சி முகவா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அதிகாரி தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது என்று நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அக்கட்சியின் வேட்பாளா்கள் அப்துல் வஹாப், பாலேந்திரன் ஆகியோா் மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு கட்சியினரும் 15 முகவா்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து முகவா்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசிகள் குறித்த பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், வெளிப்படைத் தன்மை இல்லாத சூழலில் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

இந்நிலையில் வேட்பாளா்கள், முகவா்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தலாம். எனவே முகவா்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை மாவட்ட தோ்தல் அதிகாரி திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT