முகப்பு
கோயம்புத்தூர்

இரவு நேர ஊரடங்கை மீறியதாக மாநகரில் 170 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகரில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 170 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கோவை மாநகரில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 170 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருபவா்களை கண்காணிக்க மாநகரில் 500 போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். முக்கியப் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றித் திரிபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். முதல் நாளில் ஊரடங்கை மீறியவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். அதன்பின்னா் இரவு நேர ஊரடங்கை மீறியதாக இதுவரை மாநகரில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.