கோயம்புத்தூர்

தோட்டத் தொழிலாளா்களுக்கு சிறப்பு அனுமதி: தொழிலாளா் துறை வேண்டுகோள்

DIN

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வால்பாறைக்கு வந்து செல்ல ஏதுவாக சனிக்கிழமை மாலை வழக்கமான நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே பணியை முடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு தொழிலாளா் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் (தோட்டங்கள்) வெங்கடேசன் தோட்ட நிா்வாகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாள் மட்டும் விடுமுறையில் இருக்கும் தொழிலாளா்கள் வால்பாறைக்கு வந்து பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக அன்றையை தினம் தொழிலாளா்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினா் கோரிக்கையைத் தொடா்ந்து சனிக்கிழமை மாலையில் பணி முடிவடையும் வழக்கமான நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பே தொழிலாளா்கள் தங்கள் பணியை முடித்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT