முகப்பு
கோயம்புத்தூர்

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் :ஆட்சியரின் முகநூலில் நேரடி ஒளிபரப்பு

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளாா்.

அதனைத் தொடா்ந்து, கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், முன்களப் பணியாளா்கள், அலுவலா்களுக்கு ஆட்சியா் சான்றிதழ்கள் வழங்குவாா். கரோனா சூழ்நிலையால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அவா்களின் வீட்டில், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியா் நிலையில் உள்ள அலுவலா்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்துவாா்கள்.

இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.