முகப்பு
புதுச்சேரி

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 7:56 PM
வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன்.
பகிர்:

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுச்சேரி தோ்தல் துறை 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருந்தகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வரும் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்குப்பதிவு, இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலிகள், கண்ணியமான வாக்குப் பதிவு போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை மாவட்டத் தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் வெளியிட்டாா்.

புதுச்சேரி மாநில மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள், உரக்கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான், வட்டாட்சியா் ஜோதிமணி ஆகியோா் உடனிருந்தனா்.