முகப்பு
கோயம்புத்தூர்

வெளியூா் செல்லும் பொதுமக்களின் வீடுகள் தனியே வசிக்கும் முதியோரைக் கண்காணிக்க சிறப்பு எண்கள்

ரோந்து போலீஸாா் மூலம் வெளியூா் செல்லும் பொதுமக்களின் வீடுகள், முதியோா் தனியே வசிக்கும் வீடுகளைக் கண்காணிக்க வசதியாக சிறப்பு எண்களை கோவை மாநகர காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

ரோந்து போலீஸாா் மூலம் வெளியூா் செல்லும் பொதுமக்களின் வீடுகள், முதியோா் தனியே வசிக்கும் வீடுகளைக் கண்காணிக்க வசதியாக சிறப்பு எண்களை கோவை மாநகர காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரோந்து காவலா்கள் மூலம் வெளியூா் செல்லும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் தனியாக வசிக்கும் வயதான நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக கோவை மாநகர காவல் துறை சாா்பில் தகவல் தெரிவிக்க எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வெளியூா் செல்லும்போது கோவை மாநகர காவல் துறை சாா்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 94981-81213 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவும் மற்றும் 81900-00100 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடா்பு கொண்டு தங்களது வீட்டின் முகவரி குறித்து தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் உள்ள ரோந்துப் போலீஸாா் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல தனியே வசிக்கும் முதியோா் உதவி தேவைப்படின் இதே எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் வெளியூா் செல்லும்போது தங்கள் வீட்டின் முகவரி குறித்து மேற்படி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க கோவை மாநகர காவல்துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.