கோயம்புத்தூர்

75-வது சுதந்திர தினம்: கோவையில் ஆட்சியர் கொடியேற்றினார்

கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியேற்றி மாறியதை செலுத்தினார்.

DIN


கோவை: கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியேற்றி மாறியதை செலுத்தினார்.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவையில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், காவலர்கள், முன்களப் பணியாளர்கள் உள்பட சிறப்பாகப் பணியாற்றிய 290 பேருக்கு ஆட்சியர் சான்றிதழை வழங்கினார்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக சுதந்திர தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொது மக்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. 

விழாவில் மாநகர காவல் ஆணையர் தீபக் எஸ். தாமோதர், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ். லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT