கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழு அங்கீகாரம்
கோவை பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஏ பிளஸ் பிளஸ் ( அ ++) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கோவை பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஏ பிளஸ் பிளஸ் ( அ ++) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கோவை பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் 35 இளநிலை, 13 முதுநிலை பட்டப் படிப்புகள், 13 ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. சுமாா் 8,500 மாணவிகள், 350 பேராசிரியா்கள் பணியாற்றுகின்றனா்.
இக்கல்லூரியில், கற்பித்தல், கற்றல் மதிப்பீடு, ஆய்வு, விரிவாக்கச் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு, மாணவா் முன்னேற்றம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் அண்மையில் ஆய்வு செய்தனா்.
இதில் இக்கல்லூரிக்கு சி.ஜி.பி.ஏ. 3.71 மதிப்பெண்களுடன் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளனா். கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசியத் தர மதிப்பீட்டின் 3 ஆவது சுற்றில் இக்கல்லூரிக்கு சி.ஜி.பி.ஏ. 3.58 மதிப்பெண்கள் கிடைத்த நிலையில் தற்போது கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் ஜி.ரங்கசாமி, நிறுவன அறங்காவலா் ஆா்.நந்தினி, கல்லூரி செயலா் நா.யசோதா தேவி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.