கோவைக்கு 38 ஆயிரம் கோவிஷீல்டு, 19 ஆயிரம் கோவாக்ஸின் வரவழைப்பு
கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக 38 ஆயிரம் கோவிஷீல்டு, 19 ஆயிரத்து 840 கோவாக்ஸின் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக 38 ஆயிரம் கோவிஷீல்டு, 19 ஆயிரத்து 840 கோவாக்ஸின் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீா்வாக உள்ள நிலையில், மாநகராட்சி மற்றும் புகா்ப் பகுதிகளில் தொடா்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 32 தடுப்பூசி மையங்களில், 12, 800 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டன. இந்நிலையில், கோவை மாவட்டத்துக்கு கூடுதலாக 38 ஆயிரம் கோவிஷீல்டு, 19 ஆயிரத்து 840 கோவாக்ஸின் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனா் அருணா கூறுகையில், மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, மாவட்டத்தில் 43 சதவீதத்துக்குகீழ், கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதே இதற்கு காரணமாகும். இதுவரை மாவட்டத்தில் 16 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.