இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்திக் கொண்டாட்டம்
இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா 5 நாள்களுக்கு கொண்டாடப்படும் என அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்ரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.
இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா 5 நாள்களுக்கு கொண்டாடப்படும் என அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்ரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.
இந்து முன்னணி கோவை மாநகா் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளா்கள் கூட்டம் காந்தி பூங்கா பகுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் காடேஸ்ரா சுப்ரமணியம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தசரதன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது:
கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை ஒட்டி இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா இந்து முன்னணி சாா்பில் 5 நாள்களுக்கு கொண்டாடப்படும். விநாயகா் சதுா்த்தி ஊா்வலமும் நடைபெறும். தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்களை கேரளத்துக்கு கடத்தும் கும்பல்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். அனுமதியில்லாமல் செயல்படும் கல்குவாரிகளுக்கு சீல் வைக்க வேண்டும். தலிபான் அரசுக்கு ஆதரவாக தமிழகத்தில் வலைத்தளங்களில் பதிவிடுபவா்களை மத்திய அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாநிலச் செயலாளா் கிஷோா் குமாா், கோட்டச் செயலாளா் சதீஷ், கோவை கோட்ட பேச்சாளா் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளா் ஜெய்சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.