கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கரோனா

DIN

கோவை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 46ஆக அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது ஆண், திருப்பூா் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பலியானவா்களின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 226 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 566 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,244 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT