கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் இரைப்பைக் கோளாறைக் கண்டறிய நவீன கருவி
இரைப்பையின் கோளாறுகளைக் கண்டறியும் நவீன கருவி கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இரைப்பையின் கோளாறுகளைக் கண்டறியும் நவீன கருவி கோவை வி.ஜி.எம். மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து மருத்துவா் மோகன் பிரசாத் கூறியிருப்பதாவது:
வி.ஜி.எம். மருத்துவமனை தென்னிந்தியாவில் முதல் முறையாக இரைப்பை முழு பரிசோதனையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. தற்போது உயரிய நிலை இரைப்பை முழு பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, இதயத்தின் மின் அலைகளை ஈ.சி.ஜி. கண்டறிவதைப் போல, இரைப்பையின் மின் அலைகளைக் கண்டறியும் இ.ஜி.ஜி. எனப்படும் எலெக்ட்ரோ காஸ்ட்ரோ கிராபி என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் மூலமாக இரைப்பையின் ஐ.சி.சி. செல்கள் குறைவதாலும் அழிவதாலும் ஏற்படும் பசியின்மை, பொருமல், குமட்டல் போன்றவற்றை சுலபமாக கண்டறிய முடியும்.
இந்தக் கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் பரிசோதனை செய்ய முடியும். அல்ட்ரா ஸ்கேன், சி.டி. ஸ்கேன், எண்டோஸ்கோப்பி மூலம் ஜீரணம் தொடா்பான கோளாறுகளை துல்லியமாக கண்டறிய முடியாது. இந்த நிலையில் தற்போது அறிமுகமாகியிருக்கும் இ.ஜி.ஜி. கருவி ஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவா்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.