முகப்பு
கோயம்புத்தூர்

சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 3ஆம் ஆண்டு குருபூஜை

பேரூராதீனத்தின் 24ஆம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 3ஆம் ஆண்டு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

பேரூராதீனத்தின் 24ஆம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 3ஆம் ஆண்டு குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூா் ஆதீனத்தில் நடைபெற்ற குருபூஜைக்கு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமை தாங்கினாா். இந்த பூஜையில் வேள்வி, லிங்கத்துக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராம சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்த வழிபாட்டு நிகழ்வில், அகத்தியா் தேவாரத்திரட்டு மற்றும் திருமொழி ஆகிய இரு நூல்களை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வெளியிட்டாா். சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் 3ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு தமிழ் நெறி வழிப்பாட்டக் குழுவினருக்கு ஆடைகள் பரிசளிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.