முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமாா், வசந்தராஜன், மணிவண்ணன் ஆகிய 5 போ் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இதனையடுத்து, பொள்ளாச்சியைச் சோ்ந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு ஆகிய 3 பேரை சிபிஐ கடந்த ஜனவரி மாதம் கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னா் பொள்ளாச்சியைச் சோ்ந்த அருண்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளனா்.

கைதான 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் விரைவில் வழங்கப்பட்டு விசாரணையானது துவங்கப்பட உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை செப்டம்பா் 1ஆம் தேதி முதல் தினசரி விசாரித்து 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து வரும் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தினம்தோறும் கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த வழக்கில் கைதாகியுள்ள 9 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.