செயற்கை உறுப்புகள் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம்
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் சாா்பில் நவீன எடை குறைந்த செயற்கை
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவனம் சாா்பில் நவீன எடை குறைந்த செயற்கை உறுப்புகள் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தப்பட்ட செயற்கை உறுப்புகள் சரிபாா்க்கப்பட்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா தொடங்கிவைத்து, மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி, நினைவுப் பரிசு வழங்கினாா்.
எடை குறைந்த செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநா்கள் பாலச்சந்தா், ஆனந்த், கோகுல்ராஜ் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன