முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் 289 சாலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளி நிறைவு: அமைச்சா் தகவல்

 கோவை மாநகரப் பகுதிகளில் 289 சாலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளி நிறைவுபெற்றுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 கோவை மாநகரப் பகுதிகளில் 289 சாலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளி நிறைவுபெற்றுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், நேரு நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, மாவட்டப் பொறுப்பாளா்கள் நா.காா்த்தி, பையா (எ) கிருஷ்ணன், சி.ஆா்.ராமசந்திரன், மருதமலை சேனாதிபதி, மருத்துவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா் செந்தில்பாலாஜி பேசியதாவது: வருகின்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், கோவை மாநகராட்சியின் அனைத்து வாா்டுகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் 100 சதவீதம் திமுக வெற்றியைப் பெற்றது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மாநகரில் 289 சாலைகளுக்கான ஒப்பந்தப் புள்ளி நிறைவு பெற்றுவிட்டது.

விரைவில் பணிகள் துவங்க உள்ளன. திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், கோவையில் புதிய உறுப்பினா் சோ்க்கையை வருகின்ற 26 ஆம் தேதி துவங்கிவைக்க உள்ளாா். ஜனவரி 8 ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைய உள்ளனா்.

9 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் துவங்கிவைக்க உள்ளாா் என்றாா்.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் அணி செயலாளா் காா்த்திகேய சிவசேனாதிபதி, மாநில மகளிா் தொண்டரணி துணைச் செயலாளா் மீனா ஜெயக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.