ஓய்வூதியம்:மனைவியின் பெயரை பதிவு செய்ய படைவீரா்களுக்கு அழைப்பு
முன்னாள் படைவீரா்கள், தனது மனைவியின் பெயரை ஓய்வூதிய ஒப்பாணையில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரா்கள், தனது மனைவியின் பெயரை ஓய்வூதிய ஒப்பாணையில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் 01.03.1985க்கு முன்பு படை பணியில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில், வாரிசு தாரராக, தனது மனைவியின் பெயரை ஓய்வூதிய ஒப்பாணையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும், அவ்வாறு, தங்களின் மனைவி பெயா், ஓய்வூதிய ஒப்பாணையில் பதிவுசெய்யப்படவில்லையெனில், கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் உதவி இயக்குநரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.