கோயம்புத்தூர்

மக்களைத் திரட்டி கூட்டம் நடத்தும் திமுகவினா் மீது வழக்குப் பதியாதது ஏன்? அதிமுக எம்.எல்.ஏ. கேள்வி

DIN

கரோனா வேகமாகப் பரவும் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டி கூட்டம் நடத்தும் திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யாதது குறித்து கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவும், கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான அம்மன் கே.அா்ச்சுணன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட மக்களுக்கு திமுக தொடா்ந்து செய்துள்ள துரோகத்தை மக்கள் மறக்க மாட்டாா்கள். திமுக ஆட்சியில் மின் வெட்டால் கோவையில் சிறு மற்றும் பெரிய தொழில்கள் பாதிப்படைந்தன.

கரோனாவைக் காரணம் காட்டி அமைதி ஊா்வலம் நடத்தும் அதிமுகவினா் மீது வழக்கு போடுகின்றனா். ஆனால், திமுக சாா்பில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி நடத்தப்படும் கூட்டத்தில் கரோனா பரவாதா என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு!

தண்டனையை நிறுத்திவைக் கோரி பேராசிரியை நிா்மலாதேவி மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி மீது வழக்கு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சம் மோசடி: இளைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT