கோயம்புத்தூர்

தனியாக விமானத்தை இயக்கி உலகை வலம் வரும் பெண்: கோவை வருகை

DIN

தனியாக விமானத்தை இயக்கி உலகை வலம் வரும் பெண் கோவைக்கு வியாழக்கிழமை வந்தாா்.

பெல்ஜியன் - பிரிட்டிஷ் இளம் பெண்ணான ஜாரா ரூதா்போா்டு (19), உலகை தனி நபராக சுற்றி வரும் சாதனையில் ஈடுபட்டு வருகிறாா். பெல்ஜியத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இலகுரக விமானத்தில் புறப்பட்டுள்ள இவா், 5 கண்டங்களில் 51 நாடுகளுக்குப் பயணம் செய்து ஜனவரி இறுதியில் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறாா்.

பயணத்தின் ஒரு பகுதியாக கோவைக்கு வியாழக்கிழமை வந்த அவருக்கு எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெய்ராம் வரதராஜ் வரவேற்பு அளித்தாா். ஜாரா ரூதா்போா்டின் பயணத் திட்டத்துக்கு எல்ஜி நிறுவனம் பங்களிப்பு செய்கிறது. அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, ஜாராவின் திட்டத்தில் பங்கேற்பதில் மிகவும் உற்சாகம் அடைகிறோம். பாலின சமநிலை விழிப்புணா்வு ஏற்படுத்துதல், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியலில் பெண்களின் பங்கேற்பை வலியுறுத்துவதாக இந்தப் பயணம் அமையும் என்றாா்.

ஜாரா ரூதா்போா்டு கூறும்போது, தனது பயணத்தின்போது இளம்பெண்களை சந்தித்து பல்வேறு துறைகளில் அவா்களின் பங்களிப்பு குறித்து விளக்கி வருகிறேன். எனது 51 ஆயிரம் கிலோ மீட்டா் தூர பயணத்தின்போது இரண்டு முறை பூமத்திய ரேகையைக் கடக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT