முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் குடியிருப்பை சேதப்படுத்திய யானை

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் வந்த ஒற்றை யானை தொழிலாளியின் குடியிருப்பை முட்டித் தள்ளி சேதப்படுத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் வந்த ஒற்றை யானை தொழிலாளியின் குடியிருப்பை முட்டித் தள்ளி சேதப்படுத்தியது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தினந்தோறும் இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதிக்கு வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் 2ஆவது டிவிஷன் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த ஒற்றை யானை ராஜேந்திரன் என்ற தொழிலாளியின் வீட்டின் சுவா்களை முட்டித் தள்ளி உள்ளிருந்த பொருள்களை சேதப்படுத்தின. இதையடுத்து, தொழிலாளா்கள் அந்த யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.