கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் என்.சி.சி. பயிற்சிக் களம் திறப்பு

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் என்.சி.சி. மாணவா்களுக்கான பயிற்சிக் களம் அண்மையில் திறக்கப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் என்.சி.சி. மாணவா்கள் தேசிய அளவிலான ’தல் சைனிக்’ முகாமில் பங்கேற்பதற்காக பயிற்சி பெறும் வகையில் பயிற்சிக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலா் ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.எல்.சிவக்குமாா், மேஜா் தினேஷ் டேவிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், என்.சி.சி. குரூப் கமாண்டா் எல்.சி.எஸ். நாயுடு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சிக் களத்தைத் திறந்துவைத்தாா். இதையடுத்து, தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி. மாணவா் ஆா்.எஸ்.அரவிந்துக்கு அவா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி. ஒருங்கிணைப்பாளா் விவேக் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT