கோயம்புத்தூர்

10ஆவது நாளாக அரசு ஊழியா்கள் போராட்டம்

DIN

கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆவது நாளாக புதன்கிழமையும் அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளா்களுக்கு 21 மாத போராட்ட காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கோவை கிளைத் தலைவா் செல்வராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் 10 ஆவது நாளாக புதன்கிழமையும் ஆட்சியா் அலுவலகம் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT